பிள்ளை நிலா... (19 )
இரவில் கழட்டிவிட்ட
காலணிகளில் ஈரம் சொட்டும்
காலையில் ..
மழை வந்திருக்குமோ
என்று திகைக்கும்
என்னைகேலிசெய்யும்
அங்கு நீ
ஈரத்துடன் கழட்டிவிட்ட
கால்சட்டை ...
பிள்ளை நிலா... (20 )
***********************
பெரிய கிண்ணத்தில் உனக்கும்
சற்று சிறிய கிண்ணத்தில்
எனக்கும் நொறுக்குத்தீனி
கொடுத்தார் உன் அப்பத்தா...
நீ என்னருகில் வந்து
பெரியதைக் கொடுத்துவிட்டு
சிறியதைக் கேட்டாய்...
புரியாமல் கேட்கின்றாயோ
என திகைத்தேன் ..
நீயோ சிறியதை வேகமாய்
காலிசெய்துவிட்டு
பெரிய கிண்ணத்தை
பறித்துக்கொண்டு ஓடினாய்
முட்டளானேன் நான் உன்னிடம்....
பிள்ளை நிலா... (21 )
***********************
ஏ ஏ என்று
சொல்லிக்கொண்டிருதாய்
வீட்டின் மூலையில்
நின்று ஒருநாள்...
நீ எதையோபார்த்து
விளையடிக் கொண்டிருப்பதாக
நினைத்துத் தேடினேன்
எதுவுமில்லை அங்கே...
எனக்குத்தெரியாமல் நீ
நிறைய புதிய விஷயங்கள்
தெரிந்துகொல்வதைச்
சொல்லியது உன் கையில்
ஆங்கில ஏ வடிவில்
வளைக்கப்பட்டிருந்த குச்சி....
பிள்ளை நிலா... (22 )
***********************
ப்பா என்பாய்
கலர்பென்சில் வேண்டும்
ப்பா என்பாய்
வரைய காகிதம் வேண்டும்
ப்பா என்பாய்
நான் அதில் ஏதாவது
வரையவேண்டும்
ப்பா..ப்பா..
என்று நீ சொல்லச்சொல்ல
நான் தொடரவேண்டும்
உனக்கு போரடிக்கும் வரை...
எனக்கு நிச்சயம் போரடிக்காது
வாய்திறந்து பேசேன் எதாவது....
No comments:
Post a Comment