நீளும் இரவொன்றின்
கனவை
நீண்ட துரத்தலுக்குப்
பின் கைப்பற்றி
நீ இருப்பாய் எனத்
தேடுவேன்...
அழுத்தும் சுமைகளின்
வழியே ஆறுதலின்றி
தவிக்கும் மனதை
அழவிட்டு ரசிக்கும்
நீயில்லா கனவுகள்...
இரவின் உறவே
வேண்டாமென்று
தூங்காது சிவக்கும்
கண்களை
வருடித் தாலாட்டும்
சில பழைய இரவின்
பதிவின் பிம்பங்களாய்
உன் கனவின்
நினைவுகள்....
****************
ஒரு மழைத் தூறலின்
மாலையில்
ஒரு கோப்பைத்
தேநீரை உறிஞ்சின
நம்மிருவர் உதடுகள்...
உஷ்ணத்தின் வெப்பத்தால்
உடைந்த கோப்பையின்
பின்னே ஒளிந்திருந்தது
யார்..?
நம்மிருவர் உதடுகளா
தேநீரா சொல்...?
No comments:
Post a Comment