கண்மாய் கரைகளிலும்
கிணற்றடியிலும்
ஒளிந்து
காத்துக் கிடந்திருக்கிறார்கள்
ஆண்கள்
ஒரு காலத்தில்
காதலிகளை காண....
வாரக் கணக்கிலோ
வருடக் கணக்கிலோ
இருவரும்
பேசமுடியாமல் கூட
வளர்ந்திருக்கிறது
காதல் ஒரு காலத்தில்...
காதலி மார்பில்
ஒளித்து வைத்திருந்து
கொடுத்த
கடிதத்தின் வியர்வை
நுகர தனியிடம் தேடி
தடுமாறிப் போயினர்
காதலர்கள்
ஒரு காலத்தில்....
அன்னமும்
குயிலும்
மயிலும்
பறந்து போய்விட
இன்று செல் வந்து
சேர்ந்திருக்கிறது புதிதாய்
காதலர்களுக்கு கடவுளாகவும்
பெற்றோருக்கு சனியனாகவும்....
தலைகுனிந்தே நடக்கிறாள்
ஜீன்ஸ் மங்கை
நாணத்தினால் அல்ல
குறுஞ்செய்திகளில் குவியும்
காதல் பரிமாற்றத்தில்
மூழ்கி...
தொடுதிரையில்
தேய்ந்து கொண்டிருக்கின்றன
வெண்டைக்காய் விரல்கள்
சைலன்ட் மோடில்
சத்தமின்றி வருகின்றன
காதல் முத்தங்கள்
ஆண்களின்
தலையனைகளுக்கு அடியிலும்
பெண்களின் டெடிபேர்
போம்மைகளினுள்ளும்
சத்தமின்றி
வளர்க்கின்றன செல்பேசிகள்
காதலை...
பெற்றோரை மட்டும்
எப்பொழுதும்
தொடர்பு எல்லைக்கு
கிணற்றடியிலும்
ஒளிந்து
காத்துக் கிடந்திருக்கிறார்கள்
ஆண்கள்
ஒரு காலத்தில்
காதலிகளை காண....
வாரக் கணக்கிலோ
வருடக் கணக்கிலோ
இருவரும்
பேசமுடியாமல் கூட
வளர்ந்திருக்கிறது
காதல் ஒரு காலத்தில்...
காதலி மார்பில்
ஒளித்து வைத்திருந்து
கொடுத்த
கடிதத்தின் வியர்வை
நுகர தனியிடம் தேடி
தடுமாறிப் போயினர்
காதலர்கள்
ஒரு காலத்தில்....
அன்னமும்
குயிலும்
மயிலும்
பறந்து போய்விட
இன்று செல் வந்து
சேர்ந்திருக்கிறது புதிதாய்
காதலர்களுக்கு கடவுளாகவும்
பெற்றோருக்கு சனியனாகவும்....
தலைகுனிந்தே நடக்கிறாள்
ஜீன்ஸ் மங்கை
நாணத்தினால் அல்ல
குறுஞ்செய்திகளில் குவியும்
காதல் பரிமாற்றத்தில்
மூழ்கி...
தொடுதிரையில்
தேய்ந்து கொண்டிருக்கின்றன
வெண்டைக்காய் விரல்கள்
சைலன்ட் மோடில்
சத்தமின்றி வருகின்றன
காதல் முத்தங்கள்
ஆண்களின்
தலையனைகளுக்கு அடியிலும்
பெண்களின் டெடிபேர்
போம்மைகளினுள்ளும்
சத்தமின்றி
வளர்க்கின்றன செல்பேசிகள்
காதலை...
பெற்றோரை மட்டும்
எப்பொழுதும்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் விட்டுவிட்டு....
No comments:
Post a Comment