மாங்கோவா
திராட்சையா
ஆரஞ்சா எனப்பார்க்கும்
குழந்தையின் கண்கள்
ஐஸ்வண்டிக்காரனின் கைகளை...
ரெண்டா
அஞ்சா பத்தா
எனப்பார்க்கும்
ஐஸ்வண்டிக்காரனின் கண்கள்
குழந்தையின் கைகளை...
நூறு குழந்தையின் கைகள்
தேடியும்
ஐஸ்வண்டிக்கரனின் கண்கள்...
ஒரே ஐஸ் குச்சியில்
நிறைந்துவிடும்
குழந்தையின்
வயிறும் மனதும் ....
திராட்சையா
ஆரஞ்சா எனப்பார்க்கும்
குழந்தையின் கண்கள்
ஐஸ்வண்டிக்காரனின் கைகளை...
ரெண்டா
அஞ்சா பத்தா
எனப்பார்க்கும்
ஐஸ்வண்டிக்காரனின் கண்கள்
குழந்தையின் கைகளை...
நூறு குழந்தையின் கைகள்
தேடியும்
நிறையாத மனதுடன்
அலையும்ஐஸ்வண்டிக்கரனின் கண்கள்...
ஒரே ஐஸ் குச்சியில்
நிறைந்துவிடும்
குழந்தையின்
வயிறும் மனதும் ....
No comments:
Post a Comment