Aug 29, 2011

 எங்க அப்பாகிட்ட
ஒரு கார் இருக்கே....
எங்க அப்பாகிட்ட
ரெண்டு சைக்கிள் இருக்கே....
கார் பெருசா
சைக்கிள் பெருசா....?
சைக்கிள்தான் பெருசு போ...
எனத் தொடரும்
ஒப்பீடுகளில்
ஒப்பீடுகள் ஒருநாளும்
ஜெயித்ததில்லை
குழந்தைகளின் உலகை....

No comments: