விண்மீன்கள் கண்சிமிட்டும்
நேரத்தில் புறப்பட்டு
நீ என்னிடம்....
உன் புன்னைகை
காணாத எந்தஒரு
காலைப் பொழுதும்
புலர்ந்துவிடுவதில்லை
என்னக்கு ...
நீயே தொடங்கியும்
நீயே முடித்தும் வைக்கிறாய்
என் தினங்களை...
உன்னை மறந்த
கணங்கள் என் கடிகாரத்தின்
குறிப்புகளில் இல்லை
உன்னை விலக்கிய
பொழுதுகள் என்னுடையன
அல்ல...
என் அட்டவணைகளின்
முதலிலும்
இடையிலும் பின் முடிவிலும்
நீயே நிறைந்திருக்கிறாய்..
உணர்வுகள் கூட
உன்னைமட்டுமே
தூக்கிச் சுமப்பதால்
எனக்கென்று எதுவுமில்லை
தனிப்பட்ட அடையாளங்கள்...
என் அடையாளங்களே
நீதான் எனும்பொழுது
உன் வார்த்தைகளில்
ஒரு எழுத்தாய்
இருப்பதையே நான்
விரும்புகிறேன்......
நேரத்தில் புறப்பட்டு
விடியலின் கதிர்களில்
வந்து சேர்கிறாய் நீ என்னிடம்....
உன் புன்னைகை
காணாத எந்தஒரு
காலைப் பொழுதும்
புலர்ந்துவிடுவதில்லை
என்னக்கு ...
நீயே தொடங்கியும்
நீயே முடித்தும் வைக்கிறாய்
என் தினங்களை...
உன்னை மறந்த
கணங்கள் என் கடிகாரத்தின்
குறிப்புகளில் இல்லை
உன்னை விலக்கிய
பொழுதுகள் என்னுடையன
அல்ல...
என் அட்டவணைகளின்
முதலிலும்
இடையிலும் பின் முடிவிலும்
நீயே நிறைந்திருக்கிறாய்..
உணர்வுகள் கூட
உன்னைமட்டுமே
தூக்கிச் சுமப்பதால்
எனக்கென்று எதுவுமில்லை
தனிப்பட்ட அடையாளங்கள்...
என் அடையாளங்களே
நீதான் எனும்பொழுது
உன் வார்த்தைகளில்
ஒரு எழுத்தாய்
இருப்பதையே நான்
விரும்புகிறேன்......
No comments:
Post a Comment