பிரிவுதான் முடிவென்று
முன்னமே தெரிந்திருப்பின்
நானும் என்
காதலும் மரித்திருப்போம்
முதல் நாளில்....
* * * *
ஊமைக் கண்களுக்குள்ளும்
ஒளிந்திருக்கின்றன
ஒன்றிரண்டு வார்த்தைகள்
உனக்காக...
மௌனம் தவிர்த்து
ஒன்றுமில்லை
பேசும் உதடுகளிடம்...
* * * *
உன்னைத் தொடரும்
என்னை நிறுத்திவிடுகிறது
உன் பொய்க்கோபம்
எப்படித் தடுப்பாய்
உன் பின் ஓடிவரும்
மனதை....
* * * *
இரை என்று சொல்கிறது
பருந்து
நதி என்று சொல்கிறது
அன்னம்
அலை என்று சொல்கிறது
மீன்கள்
எப்படிச் சொல்லி
புரியவைப்பேன்
அது உன் கூந்தலென...?
* * * *
குளிக்கும் பொழுதெல்லாம்
ஒட்டிவைத்து பின்
மறந்துவிடுகிறாய்
ஸ்டிக்கர் பொட்டுகளை
சுவற்றில்...
களவாடி
நட்சத்திரங்களாக்கி கொள்கிறது
வானம்...
******
எதிர்வரும் குழந்தைகளை
கொஞ்சி முதமிட்டபின்
என்னைத் தேடும் உன்
கண்கள் கொடுத்துவிடுகின்றன
எனக்கான முத்தங்களை.....
*******
கன்னிமாரா முதல்
அண்ணா நூலகம்வரை
அலசியாயிற்று
எங்குமில்லை
உன் உதட்டு வரிகளை
மொழிபெயர்க்கும்
ஒரு அகராதி ......
******
மரண தண்டனை
வேண்டாமென மனுப்போட்டு
ஓய்ந்துவிட்டது என்
இதயம்..
இன்னும் இறக்கம்காட்ட
மனமின்றி உன் கண்கள்....
*********
கடிகாரத்தின் முட்களைப்போல்
ஓடிக்கொண்டிருக்கிறோம்
நான் நீ என்காதல் ...
மூவரும் சந்திக்கும்
தருணங்களில் மணியடிக்கிறது
மனதில்....
******
எல்லா நாள்காட்டிகளின்
அட்டைகளிலும் நீ
அதன் எல்லா பக்கங்களிலும்
உன் பிறந்தநாள்
அச்சுப்பிழையா இல்லை
என்மனதின் அச்சில்
பிழையா?
*********
உன்னை
பார்க்கமுடியா தினங்கள்
துக்கநாட்கள்...
நீ எனை
பார்க்கமுடியா தினங்கள்
ஓய்வுநாட்கள்...
எதிரெதிராய் நானும் நீயும்
பார்க்கும் தினங்கள்மட்டும்
வேலைநாட்கள்
என் காதலுக்கு....
************
என் சாபத்தால்
மட்டுமே உதிர்ந்து
சருகாகிப் போகின்றன
உன் கூந்தலேறிய பூக்கள்
என் வரத்தால்
வானவில்லாகின்றன
உன் உடைந்த வளையல்கள்...
***********
மானிடம் கண்களும்
மலரிடம் மென்மையும்
நிலவிடம் குளுமையும்
வாங்கி
நீயே உன்னை
படைத்துக்கொண்டாய்
போலும்
பிரம்மன் தூங்கிய பொழுதில்...
*************
முன்னமே தெரிந்திருப்பின்
நானும் என்
காதலும் மரித்திருப்போம்
முதல் நாளில்....
* * * *
ஊமைக் கண்களுக்குள்ளும்
ஒளிந்திருக்கின்றன
ஒன்றிரண்டு வார்த்தைகள்
உனக்காக...
மௌனம் தவிர்த்து
ஒன்றுமில்லை
பேசும் உதடுகளிடம்...
* * * *
உன்னைத் தொடரும்
என்னை நிறுத்திவிடுகிறது
உன் பொய்க்கோபம்
எப்படித் தடுப்பாய்
உன் பின் ஓடிவரும்
மனதை....
* * * *
இரை என்று சொல்கிறது
பருந்து
நதி என்று சொல்கிறது
அன்னம்
அலை என்று சொல்கிறது
மீன்கள்
எப்படிச் சொல்லி
புரியவைப்பேன்
அது உன் கூந்தலென...?
* * * *
குளிக்கும் பொழுதெல்லாம்
ஒட்டிவைத்து பின்
மறந்துவிடுகிறாய்
ஸ்டிக்கர் பொட்டுகளை
சுவற்றில்...
களவாடி
நட்சத்திரங்களாக்கி கொள்கிறது
வானம்...
******
எதிர்வரும் குழந்தைகளை
கொஞ்சி முதமிட்டபின்
என்னைத் தேடும் உன்
கண்கள் கொடுத்துவிடுகின்றன
எனக்கான முத்தங்களை.....
*******
கன்னிமாரா முதல்
அண்ணா நூலகம்வரை
அலசியாயிற்று
எங்குமில்லை
உன் உதட்டு வரிகளை
மொழிபெயர்க்கும்
ஒரு அகராதி ......
******
மரண தண்டனை
வேண்டாமென மனுப்போட்டு
ஓய்ந்துவிட்டது என்
இதயம்..
இன்னும் இறக்கம்காட்ட
மனமின்றி உன் கண்கள்....
*********
கடிகாரத்தின் முட்களைப்போல்
ஓடிக்கொண்டிருக்கிறோம்
நான் நீ என்காதல் ...
மூவரும் சந்திக்கும்
தருணங்களில் மணியடிக்கிறது
மனதில்....
******
எல்லா நாள்காட்டிகளின்
அட்டைகளிலும் நீ
அதன் எல்லா பக்கங்களிலும்
உன் பிறந்தநாள்
அச்சுப்பிழையா இல்லை
என்மனதின் அச்சில்
பிழையா?
*********
உன்னை
பார்க்கமுடியா தினங்கள்
துக்கநாட்கள்...
நீ எனை
பார்க்கமுடியா தினங்கள்
ஓய்வுநாட்கள்...
எதிரெதிராய் நானும் நீயும்
பார்க்கும் தினங்கள்மட்டும்
வேலைநாட்கள்
என் காதலுக்கு....
************
என் சாபத்தால்
மட்டுமே உதிர்ந்து
சருகாகிப் போகின்றன
உன் கூந்தலேறிய பூக்கள்
என் வரத்தால்
வானவில்லாகின்றன
உன் உடைந்த வளையல்கள்...
***********
மானிடம் கண்களும்
மலரிடம் மென்மையும்
நிலவிடம் குளுமையும்
வாங்கி
நீயே உன்னை
படைத்துக்கொண்டாய்
போலும்
பிரம்மன் தூங்கிய பொழுதில்...
*************
No comments:
Post a Comment