Aug 15, 2011

அனல் வீசும்
மணல் வெளிகளில்
நடந்தும்
வெயில் தெரியவில்லை
ஏனெனில் நீயிருந்தாய்....
குளிர் வீசும்
மழைதனில் நனைந்தும்
குளிர் தெரியவில்லை
ஏனெனில் நீயிருந்தாய்..
வலிவீசும்
நோய்தனில் விழுந்தும்
வலி தெரியவில்லை
ஏனெனில் நீயிருந்தாய்...
இன்று
அனலும் குளிரும்
வலியும் உணர்கிறேன்
அணைத்துக்கொள்ள
உன் தோள்கள்
இல்லாத தனிமையில்....


No comments: