குறட்டைவிட்டு தூங்கும்
மனிதனின்
தூங்க மறுத்து அடம்பிடிக்கும்
மனதின் குரூரங்கள்
நாயாகவும் பேயாகவும்
துரத்துகின்றன கனவில்...
வெளிபடுத்த மறந்த
புன்னகையும் காதலும்
இளைப்பாறுதல் தருகின்றன
அதன் வழியே....
*******************
கண்களோ
அரைகுறையாய் சாலையிடம்
காதுகள்
முழுவதுமாய் அலைபேசியிடம்
உள்ளமோ உருகும்
மறுமுனையில் ஒருவரிடம்
உயிர்மட்டும் மெதுவாய்
ஊர்ந்து செல்லும் எமனிடம்.....
**********************
என்றாவது அலைபேசியில்
வரும் நண்பனிடம் பேச
ஐந்து நிமிடங்களுக்கு மேல்
விஷயங்கள் இருப்பதில்லை..
அப்புறம் வேறு என்ன
என அவனும்
சும்மாதான் என நானும்
துண்டித்துக் கொள்கிறோம்...
மறந்துபோன வாழ்த்துக்கள்
குறுஞ்செய்தியிலும்
தொலைந்துபோன நட்ட்புகள்
பேஸ் புக்கிலும்
தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றன
சுவாரஸ்யமின்றி.....
*********************
அம்மாவிடம்
சோறு ஊட்டி
அப்பாவிடம்
முத்தம் வாங்கி
தாத்தாவிடம் கதைகேட்டு
பாட்டியிடம்
தூங்கப்போன குழந்தை
இன்று
வராத தூக்கத்தை
வரவேற்க
இன்னும்
விரல் சூப்பிக் கொண்டிருக்கிறது
பொம்மை அணைத்தபடி ....
*****************************
மனிதனின்
தூங்க மறுத்து அடம்பிடிக்கும்
மனதின் குரூரங்கள்
நாயாகவும் பேயாகவும்
துரத்துகின்றன கனவில்...
வெளிபடுத்த மறந்த
புன்னகையும் காதலும்
இளைப்பாறுதல் தருகின்றன
அதன் வழியே....
*******************
கண்களோ
அரைகுறையாய் சாலையிடம்
காதுகள்
முழுவதுமாய் அலைபேசியிடம்
உள்ளமோ உருகும்
மறுமுனையில் ஒருவரிடம்
உயிர்மட்டும் மெதுவாய்
ஊர்ந்து செல்லும் எமனிடம்.....
**********************
என்றாவது அலைபேசியில்
வரும் நண்பனிடம் பேச
ஐந்து நிமிடங்களுக்கு மேல்
விஷயங்கள் இருப்பதில்லை..
அப்புறம் வேறு என்ன
என அவனும்
சும்மாதான் என நானும்
துண்டித்துக் கொள்கிறோம்...
மறந்துபோன வாழ்த்துக்கள்
குறுஞ்செய்தியிலும்
தொலைந்துபோன நட்ட்புகள்
பேஸ் புக்கிலும்
தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றன
சுவாரஸ்யமின்றி.....
*********************
அம்மாவிடம்
சோறு ஊட்டி
அப்பாவிடம்
முத்தம் வாங்கி
தாத்தாவிடம் கதைகேட்டு
பாட்டியிடம்
தூங்கப்போன குழந்தை
இன்று
வராத தூக்கத்தை
வரவேற்க
இன்னும்
விரல் சூப்பிக் கொண்டிருக்கிறது
பொம்மை அணைத்தபடி ....
*****************************
No comments:
Post a Comment