தினந்தோறும் நான் தரும்
புன்னகைக்கு பதிலாய்
முகந் திருப்பிகொள்வான்
அவன்...
புன்னைக்கலாமா வேண்டாமா
என்ற யோசனையில்
அண்டைவீட்டு பிள்ளைகள்...
ஒருவர் முகம் பாராமல்
தெருக் குழாயில்
தண்ணீர் பிடிக்கும் பெண்கள்...
விலைகேட்டபின்
வேண்டாம் என்றதற்கு
வசைபாடும் தெரு
வியாபாரிகள்....
என்றாவது வந்துபோகும்
தபால்காரனுக்கு
இன்றுவரை சரியான
பெயரைச் சொன்னதில்லை
நானும் மற்றவர்களும்
ஏழே வீடுகளிருக்கும்
தெருவில்...
என்றோ போட்ட
ரொட்டித் துண்டுக்கு
வாலாட்டும் அந்த
வாயில்லா ஜீவனைத்தவிர
எவரும் மாறியதாய்
தெரியவில்லை பலவருட
பட்டணத்து வாழ்க்கையில்....
புன்னகைக்கு பதிலாய்
முகந் திருப்பிகொள்வான்
அவன்...
புன்னைக்கலாமா வேண்டாமா
என்ற யோசனையில்
அண்டைவீட்டு பிள்ளைகள்...
ஒருவர் முகம் பாராமல்
தெருக் குழாயில்
தண்ணீர் பிடிக்கும் பெண்கள்...
விலைகேட்டபின்
வேண்டாம் என்றதற்கு
வசைபாடும் தெரு
வியாபாரிகள்....
என்றாவது வந்துபோகும்
தபால்காரனுக்கு
இன்றுவரை சரியான
பெயரைச் சொன்னதில்லை
நானும் மற்றவர்களும்
ஏழே வீடுகளிருக்கும்
தெருவில்...
என்றோ போட்ட
ரொட்டித் துண்டுக்கு
வாலாட்டும் அந்த
வாயில்லா ஜீவனைத்தவிர
எவரும் மாறியதாய்
தெரியவில்லை பலவருட
பட்டணத்து வாழ்க்கையில்....
No comments:
Post a Comment