(1 )
நான் நனைய
விரும்பாத பொழுதுகளில்
வரவேண்டாம் என்று
எல்லோரும் நினைப்பதால்
வந்ததும் வராமல்
திரும்பிச் செல்கிறது
மழை....
(2 )
சட்டென வருவதுமில்லை
சட்டென நிற்பதுமில்லை
மழை தேவைகளுக்கு
துதிக்கவும்
பழிக்கவும்
செய்கிறது உலகம்
மழையை...........
(3 )
பணக்காரனின்
சட்டைபையைபோல
சில இடங்களில்
பரதேசியின் திருவோடுபோல்
சில இடங்களில்
தேவைகள் அறியாமல்
பெய்துவிடுகிறது
மழை..........
(4 )
வானம் கடல்
மலை மடு
என எதையும்
விடுவதில்லை மழை
மழையின் சமதர்மம்
மனிதன் காணாதது.....
(5 )
சில இடங்களில்
நிறைகிறது தாய்
சில இடங்களில்
அணைக்கிறது மனைவி
சில இடங்களில்
முத்தமிடுகிறது காதலி
சில இடங்களில்
கொஞ்சுகிறது மகள்
மழையே நீ
பெண்தானே...?
(6 )
மண்ணோடான மழையின்
உறவு
பிணைக்கப்படுகிறது
மெல்லிய இழைகளால்..
மணித்துளிகளில்
நிமிடங்களில்
முடித்துக்கொள்கிறது
மழை
மண்ணோடான உறவை
மண் மட்டுமே
சுமந்து தவிக்கிறது
மழையின் நினைவுகளை
ஈரத்துடன்....
(7 )
மழையின் கண்ணாடிகளில்
முகம் பார்த்துக்கொள்கிறது
வானம்
தலை துவட்டிக்கொள்ள
மனமில்லா பரவசத்தில்
மரங்கள்...
(8 )
மண்ணில் இருந்து
வானம் சென்றதா
வானில் இருந்து
மண் வந்ததா?
வானம் மண்
காதலன் காதலியின்
அன்புப் பரிமாற்றம்
மழை....
(9 )
மழையின் பிரவாகத்தில்
மண்ணோடு உறவாடி
விளையாட்டுக் காட்டுகின்றன
மழைத்துளிகள்..
விளையாட நினைத்து
அடம்பிடிக்கும் குழந்தைகளை
கதவுகளுக்குள் ஒளிக்கின்றன
முன்னாள் குழந்தைகள்....
(10 )
துணியை எடுத்தாச்சா
வடகத்தை எடுத்தாச்சா
என பரபரத்தாள்
அம்மா மழையில்...
நாய்க்குட்டியை
உள்ளே கொண்டுவந்தது
குழந்தை....
(11 )
மழையின் பாடல்கள்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றன
தெருவெங்கும்...
தளும்பும் மழைநீரில்
தாளத்துடன் எடுத்துச்செல்கின்றன
பூக்களும் இலைகளும்
மழையின் பாடல்களை
கடலுக்கு...
(12 )
பளிங்கு கன்னங்களில்
இளமையாகவும்
முதுமை சுருக்கிய
கன்னங்களில் அனுபவமாகவும்
வடிகிறது மழைத்துளி...
(13 )
தங்கமில்லா வாழ்வைவிட
தண்ணீரில்லா வாழ்வு
கொடியதென்று சொல்லியது
இடி விழுந்தால்
தங்கமாக
வெளியில் காத்திருந்த
பித்தளை அண்டா
நிறைத்த மழைநீர்.........
(14 )
மழைவரும் பொழுதுகளில்
எல்லாம்
அணிச்சையாய்
மார்பு மூடிக்கொள்கின்றன
கைகள்
நீ நனைந்துவிடக் கூடாதென்று.....
(15 )
மழை
இயற்கையின் புதையல்களை
புதைத்துவிட்டு போகிறது
மண்ணின் மடியில்...
புதைந்தன பூமி பிளந்து
வெளிவருகின்ற பின்னாளில்
மறுபடியும் வந்து
நலம் விசாரிக்கிறது
மழை..........
(16 )
கடவுளின் கண்ணீர்
என்றும்
கடவுளின் மூத்திரம்
என்றும்
மழையை கைகாட்டிய
அம்மாச்சி கிழவி
கடைவரை சொல்லாமல்
சென்றது ஏன்...?
மழை
தாய்பால் என்பதனை.....
(17 )
நனையாதே
சளிபிடிக்கும் என்ற
அம்மாவிடம் கேட்டது
குழந்தை..
குருவிக்கும் அணிலுக்கும்
ஆட்டுக் குட்டிக்கும்
சளிப்பிடிக்காதா
இல்லை அதுக்கெல்லாம்
அம்மா இல்லையா...?
என்று
சத்தம் போட்டுச்
சிரித்தது மழை........
(19 )
தாழ்ந்த மரத்தின்
கிளையை பார்த்து
நீளும் கைகள்
கணிகேட்டு கெஞ்சும்
மனது...
உணர்வறிந்து வரும்
திடீர் மழை
உதிர்த்துவிடும் கனிகளை
ஒன்றுக்கு மூன்றாய்...
(20 )
மழையின் கம்பிகளுக்குள்
விரல் நுழைத்து
இசைக்கும் காற்று...
தரையின் பரப்பில்
தட்டித் தட்டித்
தாளமிடும்
மழைத்துளிகள்..
மழையின் கச்சேரியை
ரசிக்க மனமிருப்பதில்லை
மனிதனிடம்
மரங்கள் மட்டுமே
தலையாட்டி ரசிக்கும்
மழை நாட்களில்....
நான் நனைய
விரும்பாத பொழுதுகளில்
வரவேண்டாம் என்று
எல்லோரும் நினைப்பதால்
வந்ததும் வராமல்
திரும்பிச் செல்கிறது
மழை....
(2 )
சட்டென வருவதுமில்லை
சட்டென நிற்பதுமில்லை
மழை தேவைகளுக்கு
துதிக்கவும்
பழிக்கவும்
செய்கிறது உலகம்
மழையை...........
(3 )
பணக்காரனின்
சட்டைபையைபோல
சில இடங்களில்
பரதேசியின் திருவோடுபோல்
சில இடங்களில்
தேவைகள் அறியாமல்
பெய்துவிடுகிறது
மழை..........
(4 )
வானம் கடல்
மலை மடு
என எதையும்
விடுவதில்லை மழை
மழையின் சமதர்மம்
மனிதன் காணாதது.....
(5 )
சில இடங்களில்
நிறைகிறது தாய்
சில இடங்களில்
அணைக்கிறது மனைவி
சில இடங்களில்
முத்தமிடுகிறது காதலி
சில இடங்களில்
கொஞ்சுகிறது மகள்
மழையே நீ
பெண்தானே...?
(6 )
மண்ணோடான மழையின்
உறவு
பிணைக்கப்படுகிறது
மெல்லிய இழைகளால்..
மணித்துளிகளில்
நிமிடங்களில்
முடித்துக்கொள்கிறது
மழை
மண்ணோடான உறவை
மண் மட்டுமே
சுமந்து தவிக்கிறது
மழையின் நினைவுகளை
ஈரத்துடன்....
(7 )
மழையின் கண்ணாடிகளில்
முகம் பார்த்துக்கொள்கிறது
வானம்
தலை துவட்டிக்கொள்ள
மனமில்லா பரவசத்தில்
மரங்கள்...
(8 )
மண்ணில் இருந்து
வானம் சென்றதா
வானில் இருந்து
மண் வந்ததா?
வானம் மண்
காதலன் காதலியின்
அன்புப் பரிமாற்றம்
மழை....
(9 )
மழையின் பிரவாகத்தில்
மண்ணோடு உறவாடி
விளையாட்டுக் காட்டுகின்றன
மழைத்துளிகள்..
விளையாட நினைத்து
அடம்பிடிக்கும் குழந்தைகளை
கதவுகளுக்குள் ஒளிக்கின்றன
முன்னாள் குழந்தைகள்....
(10 )
துணியை எடுத்தாச்சா
வடகத்தை எடுத்தாச்சா
என பரபரத்தாள்
அம்மா மழையில்...
நாய்க்குட்டியை
உள்ளே கொண்டுவந்தது
குழந்தை....
(11 )
மழையின் பாடல்கள்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றன
தெருவெங்கும்...
தளும்பும் மழைநீரில்
தாளத்துடன் எடுத்துச்செல்கின்றன
பூக்களும் இலைகளும்
மழையின் பாடல்களை
கடலுக்கு...
(12 )
பளிங்கு கன்னங்களில்
இளமையாகவும்
முதுமை சுருக்கிய
கன்னங்களில் அனுபவமாகவும்
வடிகிறது மழைத்துளி...
(13 )
தங்கமில்லா வாழ்வைவிட
தண்ணீரில்லா வாழ்வு
கொடியதென்று சொல்லியது
இடி விழுந்தால்
தங்கமாக
வெளியில் காத்திருந்த
பித்தளை அண்டா
நிறைத்த மழைநீர்.........
(14 )
மழைவரும் பொழுதுகளில்
எல்லாம்
அணிச்சையாய்
மார்பு மூடிக்கொள்கின்றன
கைகள்
நீ நனைந்துவிடக் கூடாதென்று.....
(15 )
மழை
இயற்கையின் புதையல்களை
புதைத்துவிட்டு போகிறது
மண்ணின் மடியில்...
புதைந்தன பூமி பிளந்து
வெளிவருகின்ற பின்னாளில்
மறுபடியும் வந்து
நலம் விசாரிக்கிறது
மழை..........
(16 )
கடவுளின் கண்ணீர்
என்றும்
கடவுளின் மூத்திரம்
என்றும்
மழையை கைகாட்டிய
அம்மாச்சி கிழவி
கடைவரை சொல்லாமல்
சென்றது ஏன்...?
மழை
தாய்பால் என்பதனை.....
(17 )
நனையாதே
சளிபிடிக்கும் என்ற
அம்மாவிடம் கேட்டது
குழந்தை..
குருவிக்கும் அணிலுக்கும்
ஆட்டுக் குட்டிக்கும்
சளிப்பிடிக்காதா
இல்லை அதுக்கெல்லாம்
அம்மா இல்லையா...?
என்று
சத்தம் போட்டுச்
சிரித்தது மழை........
(19 )
தாழ்ந்த மரத்தின்
கிளையை பார்த்து
நீளும் கைகள்
கணிகேட்டு கெஞ்சும்
மனது...
உணர்வறிந்து வரும்
திடீர் மழை
உதிர்த்துவிடும் கனிகளை
ஒன்றுக்கு மூன்றாய்...
(20 )
மழையின் கம்பிகளுக்குள்
விரல் நுழைத்து
இசைக்கும் காற்று...
தரையின் பரப்பில்
தட்டித் தட்டித்
தாளமிடும்
மழைத்துளிகள்..
மழையின் கச்சேரியை
ரசிக்க மனமிருப்பதில்லை
மனிதனிடம்
மரங்கள் மட்டுமே
தலையாட்டி ரசிக்கும்
மழை நாட்களில்....
No comments:
Post a Comment