Sep 7, 2011

என் செல்பேசியே...

எனக்குள் தான்


ஒளிந்துகிடக்கிறாய்

நீ எப்பொழுதும்

உனை பிரிந்து

உலவும் தருணங்கள்

வெகு குறைவே....



உன்னை தொடாமலும்

தொட்டு உரசாமலும்

என் தினங்களில்லை....



இரவில்

என் படுக்கையில்

என்னுடன் தஞ்சம்

புகுந்துகொள்கிறாய்...

பகல் நடக்கையில்

என் மார்பிலும் மடியிலும்

ஒட்டி உறவாடி

வருகிறாய் என்னுடனே...



காதுகள் உரசி

தினம் நீசொல்லும்

ரகசியங்கள்

கண்ணுக்கு விருந்தாய்

நீ தரும் காட்சிகள்

கனவிலும் பிரியத்

துணியாது மனம் உன்னை...



நீ பழுதானால்

பதறுவதேன் மனது

செயலிழந்தால் செத்துவிடும்

என் கனவு...



ஏர்செல் ஏர்டெல்

என மாறி மாறி

உனக்குள் எத்தனைபேர்

இடம்பிடித்தாலும்

எனக்குள் இடம்பிடித்த

என் செல்பேசியே

எப்படிச் சொல்வது

உன்மேலான என்

காதலை.....

No comments: