Sep 21, 2011

குவளைகள் மோதிக்கொள்ளும்
ஒலியில் குதுகளிக்கின்றன
சனிக் கிழமையின் இரவுகள்....

அடக்க முடியாத ஆசையுடனும்
பிடிக்க முடியா வேகத்துடனும்
பறந்துபோகின்றன
இருசக்கர வாகனங்கள்
ஜோடிகளை
உப்புமூட்டை சுமந்தபடி....

கரும் பாம்பாய்
நெளியும் அழகிய
கிழக்கு கடற்கரை சாலையின்
ஒரு பகுதியெங்கும்
பரவிக் கிடக்கின்றன
மணலும் மரங்களும்
அங்கு போதையில்
கலைந்துபோய் கிடக்கிறார்கள்
மனிதர்கள்....

சவுக்கு மரத் தோப்புகளின்
நெருக்கத்தில்
ஒளிந்து விளையாடுகின்ற
ஜோடிகள்
அவர்தம் தனிமை
அறிவிக்கின்றன
தனித்து விடப்பட்ட
வாகனங்கள்....

யார் வருகிறார்கள்
என பார்த்துச் செல்கின்றன
அலைகள்
ரகசியங்கள் சுமக்கும்
மணல்
மௌனமாய் பரவிக்கிடக்கிறது...

இவர்களை அப்படியே
வாரிச்செல்ல
சுனாமி அனுப்பட்டுமா
என்கிறது கடல்
வேண்டாம் பாவமென
தலையட்டுகின்றன
மரங்கள்...

சிலரின் காலடித் தடங்களின்
பதிவுகள்
கலைக்கப் படுகின்றன
வேறு சில காலடிகளில்...

கனத்த நிசப்தம்
பரவிக்கிடக்கும் வெளிகளில்
அலைகளும்

No comments: